பிகினியில் நெட்டிசன்களை கிறங்க வைக்கும் அஜித் பட நாயகி... குவியும் லைக்குகள்
சென்னை : மணிரத்னத்தின் ஃபவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிக்க வந்தவர் கனிகா. பிறகு மாதவனுடன் எதிரி, அஜித் உடன் வரலாறு ஆகிய படங்களில் நடித்தார். பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மலையாளத்திற்கு சென்றார்.
மலையாளத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த கனிகா, அமெரிக்காவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2010ல் சாய் ரிஷி என்ற மகன் பிறந்தான்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு தமிழில் நடிக்க வந்துள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர், விக்ரம் நடிக்கும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் தனது போட்டோக்களை வெளியிட்டு வந்த கனிகா, சமீப நாட்களாக கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு வந்தார். கடந்த வாரம் குட்டை பாவாடையில் செக்ஸி வாக் செய்த வீடியோவை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார்.
இந்நிலையில் இன்று கடலின் பின்னணியில், ஆரஞ்சு நிற பிகினியில் நிற்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். அத்துடன், கம்பீரமாக இருந்தாலும் அழகாக, எளிமையாக இரந்தாலும் கவர்ச்சியான, வெட்கமாக இருந்தும் தைரியமான அன்புடன் கனிகா என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
கனிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோ மற்றும் பிகினி போட்டோ இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு லைக்குகளை அள்ளி வருகின்றன. சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தவர், இப்படி கவர்ச்சியில் இறங்கி விட்டாரே என ரசிகர்கள் பலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











