சண்டக்கோழி 2 படத்திற்காக வெயிலில் கஷ்டப்பட்ட வரலட்சுமி

சென்னை: சண்டக்கோழி 2 மாஸ் கலந்த குடும்ப பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் என வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

Varalakshmi about Sandakozhi 2

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி கூறியதாவது...

"சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வேலைப்பார்க்கும் போது நிறைய சந்தோஷமான தருணங்கள் இருந்தது. லிங்குசாமி சார் மிகவும் கூலான மனிதர். சண்டக்கோழி 2-ல் நான் கம்ஃபர்ட் சோனிலிருந்து வெளியே வந்து நடித்துள்ளேன்.

நாங்கள் திண்டுக்கல் , காரைக்குடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்தோம். அங்கே தொடர்ச்சியாக நிறைய அழகான வீடுகள் இருக்கும். படத்தின் பல முக்கியமான காட்சிகளை அங்கே தான் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு அது விருந்தாக இருக்கும்.

படத்தில் நான் நிறைய சவாலான காட்சிகளில் நடித்துள்ளேன். வெயிலில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு முகம் மற்றும் உடலில் நிற மாற்றம் ஏற்பட்டது" என்று பேசிய வரலட்சுமி, இப்படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X