செய்யக் கூடாதுன்னு சொன்னதை ஒவ்வொன்றாக செய்யும் வரலட்சுமி
Recommended Video

சென்னை: மக்கள் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்களோ அதை எல்லாம் செய்கிறார் வரலட்சுமி.
ஹீரோயினாக நடிக்க வந்த வேகத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு தாவினார் வரலட்சுமி. வில்லியா நடிக்காதே, இமேஜ் பாதிக்கும் என்று கூறியவர்களின் பேச்சை அவர் காதிலேயே வாங்கவில்லை.
வில்லி கதாபாத்திரம் மூலம் ஹீரோயின்களையே ஓவர் டேக் செய்து கொண்டிருக்கிறார்.

வரலட்சுமி
வில்லியாக கலக்கி வரும் நேரத்தில் தொலைக்காட்சி பக்கமும் வந்துவிட்டார். மார்க்கெட் போனால் தான் தொலைக்காட்சிக்கு வர வேண்டும் என்பதெல்லாம் பழைய கதை என்று துணிந்து முடிவு எடுத்துவிட்டார். ஜெயா டிவியில் உன்னை அறிந்தால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் வரலட்சுமி.

சீரியல்
டிவியில் சீரியல் பார்க்கும் காலம் மெல்ல மெல்ல மலையேறிக் கொண்டிருக்கிறது. மக்களின் கவனம் அதிலும் குறிப்பாக இளசுகளின் கவனம் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளது. இதை புரிந்து கொண்ட வரலட்சுமி வெப்சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ட்விட்டர்
தான் முதல் முதலாக வெப்சீரிஸில் நடிப்பது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி. அந்த சீரிஸை புஷ்பா இயக்குகிறார். தெலுங்கு சீரிஸ் பாஸ்.

வெற்றி
சினிமாவில் என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார் வரலட்சுமி. மார்க்கெட் நன்றாக இருக்கும்போது நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவார்கள். ஆனால் வரலட்சுமியோ வித்தியாசம், வித்தியாசமாக எதையாவது செய்ய விரும்புகிறார்.


Click it and Unblock the Notifications











