Varalakshmi: களைகட்டும் திருமண கொண்டாட்டம்..வரலட்சுமியின் அழகைப்பாருங்க!
சென்னை: சரத்குமார் மற்றும் சாயாதேவி தம்பதிகளின் மகளான வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நாளை நடைபெறும் நிலையில், திருமணக் கொண்டாட்டம் இப்போதே களைக்கட்டத் தொடங்கி உள்ளது. திருமணத்தின் ஒரு பகுதியாக மெஹந்தி கொண்டாட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகளாக இருந்தாலும், தனது திறமையால் முன்னுக்கு வந்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக நடித்த அவர், முதல் படத்திலேயே தனது சொந்தக்குரலில் பேசி,எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, தமிழ் மொழியை தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

மிரட்டலான நடிப்பு: கதையின் நாயகியாகவும் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லியாகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அதிலும் ஸ்கோர் செய்தார். அவரின் உடல்வாகுக்கும், குரலுக்கும் அந்த கதாபாத்திரமே செட்டாகி விட்டதால் தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், வீர சிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

மெஹந்தி போட்டோஸ்: படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் மும்பையில் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நாளை தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண கொண்டாட்டம் ஆரம்பாகி உள்ளது. தற்போது வரலட்சுமியின் மெஹந்தி கொண்டாட்ட போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

மோடிக்கு அழைப்புதழ்: இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பிற்கான அழைப்பிதழை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்களுக்கு குடும்பத்தோடு சென்று கொடுத்தனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து பத்திரிகை வைத்தனர். அதே போல, டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











