வரலட்சுமி பிறந்தநாள்.. 40 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?.. செம கெத்து போங்க

சென்னை: சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக கன்னடத்தில் மேக்ஸ் படமும், தமிழில் மதகஜராஜா படமும் வெளியாகின. அடுத்ததாக அவர் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நிக்கோலாய் என்பவரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்ட வருவுக்கு இன்று 40ஆவது பிறந்தநாள் ஆகும்.

தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் முதலில் சாயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. தந்தை போலவே தானும் சினிமாவில் வெல்ல வேண்டும் என்று ஆசையில் இருந்தவருக்கு முதலில் வீட்டில் பெர்மிஷன் கிடைக்கவில்லை. ஆனால் சரத்தின் முதல் மனைவி சாயாவும், இரண்டாவது மனைவி ராதிகாவும் சமாதானப்படுத்தி சரத்திடமிருந்து பெர்மிஷன் வாங்கிக் கொடுத்தார்கள். அதன்படி போடா போடி படத்தில் அறிமுகமானார் வரலட்சுமி.

Varalakshmi Tamil Cinema

நல்ல நடிகை: போடா போடி படம் சரியாக போகாவிட்டாலும் அதில் நடித்த வரலட்சுமிக்கு நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா என வரிசையாக தமிழில் நடித்தார். இருந்தாலும் அவர் எதிர்பார்த்த மிகப்பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

வருவின் படங்கள்: அந்தவகையில் கடைசியாக கன்னடத்தில் மேக்ஸ் படத்தில் நடித்தார். அதில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் தமிழில் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் சக்கைப்போடு போட்டது. சுந்தர்.சி இயக்கியிருந்த அந்தப் படம் பல வருடங்கள் கழித்து ரிலீஸாகி சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் ஜன நாயகனிலும் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது.

திருமணம்: இதற்கிடையே மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். அவர்களது காதலுக்கு வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைத்ததால் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார்கள். தாய்லாந்தில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தை அடுத்து சென்னையில் ரிசப்ஷன் நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதும்; அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமியின் பிறந்தநாள்: இந்நிலையில் வரலட்சுமி இன்று 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். மேலும் அவரது சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு 70 லட்சம் ரூபாய்வரை சம்பளமாக பெறும் அவருக்கு மொத்தம் 25 கோடி ரூபாய் அளவில் சொத்துக்கள் இருக்கின்றனவாம். அதுமட்டுமின்றி அவரது கணவர் நிக்கோலாய்க்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்வரை சொத்து இருக்குமாம். இதையும் சேர்த்தால் வரலட்சுமிக்கு கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே பிறந்தநாளை முன்னிட்டு வரலட்சுமிக்கு சரத்குமார் கேக் ஊட்டிவிடும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் இன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X