வரலட்சுமிக்கும் பட்டப் பெயர் வச்சாச்சுப்பா!
Recommended Video

சென்னை: நடிகை வரலட்சுமிக்கும் பட்டப் பெயர் வச்சுட்டாங்க. மக்கள் செல்வியாம்.
சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில், நடிகர்களுக்கு பட்டப்பெயர் என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால் பட்டப்பெயர் பெற்ற நடிகைகள் ஒரு சிலரே.
இந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும் தற்போது இணைந்துள்ளார். போடா போடி திரைப்படத்தில் கதா நாயகியாக அறிமுகமாகிய வரலட்சுமி, அடுத்து தாரை தப்பட்டை, சர்கார், சண்டகோழி 2 என குணச்சித்திர கதாபாத்திரங்கள், வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்கத் தொடங்கினார்.

டிவியில் பிசி
தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் இவர், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டேனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

செல்வி
இந்த திரைப்படத்தில் அவரது பெயருக்கு முன் "மக்கள் செல்வி" என்ற பட்டத்தை பயன்படுத்த உள்ளதாக படத்தின் இயக்குனர் சந்தான மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சேதுபதிக்குப் போட்டியா
விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மக்கள் வரலட்சுமிக்கு அளித்த வரவேற்பை வைத்தே அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பட்டம் போடும் அளவுக்கு வளர்ச்சி
வாரிசு நடிகையாக திரையுலகில் கால் வைத்தாலும், அந்த அடையாளம் அவர் மீது நிலைக்காத வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி, இப்போது பெயருக்கு முன் பட்டம் போடும் அளவுக்கு வந்திருப்பது அவரது தந்தை நடிகர் என்ற காரணத்தினால் மட்டும் அல்ல. பட்டம் கை கொடுக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











