கூலி படம் கோடி கோடியா வசூல் கொடுக்கணும் லக்ஷ்மி.. உபேந்திரா நடத்திய பிரம்மாண்ட பூஜை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர்கான், சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில், பேசிய, லோகேஷ் கனகராஜ், இந்த படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு சவுபின் சாஹிர் தான் பேசுபொருளாக இருப்பார். நடிகர் நாகர்ஜூனாவை பார்த்துதான் நான் பங்க் வைக்க ஆரம்பித்தேன். இந்த படத்தில் 1421 என கையில் பேட்ஜ் வைத்தேன். என் அப்பா பஸ் கண்டக்டர்.. அவரோட நம்பர் 1421. அதை நான் ரஜினி சாருக்கு பயன்படுத்தியுள்ளேன் என்றார். இதைத்தொடர்ந்து, கன்னட நடிகர் உபேந்திரா பேசினார். அப்போது அவர், 25 வருடங்களுக்கு முன்பு நான், நடிகர் ரஜினிகாந்தை பார்த்தேன். அன்று முதல் இன்றைக்கு வரைக்கும் நான் அவரை அப்படியே பின் தொடர்ந்து வருகிறேன். ஹாலிவுட், பாலிவுட்டில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், முதல் நாள் முதல் காட்சியில் அதிக ரசிகர்கள் கூட்டம் வருவது இவருடை படத்திற்குத்தான் என்றார்.

கூலி பான் இந்திய படம்: பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் அதிரடி காட்டி உள்ளது. கேரளாவில் தியேட்டரில் கேட்டை திறந்ததும் ரசிகர்கள் முட்டி அடித்துக்கொண்டு ஓடி டிக்கெட் வாங்கும் வீடியோவை சன் பிக்சர்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டது. மேலும், ஒரு மணி நேரத்தில் 50,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. கூலி முன் பதிவு டிக்கெட் விற்பனையில், கேரளாவில் மட்டும் ₹3 கோடி வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கோடி கோடி வசூல்: அதே போல கூலி திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்து இருப்பதால், ஐநாக்ஸ், பி.வி.ஆர், ஏஜிஎஸ் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கூலி படத்திற்கு 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மட்டுமே அழைத்து வர வேண்டாம் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க அடையாள சான்றுடன் வருமாறும் குறிப்பிட்டுள்ளது. இது கூலி படத்தின் வசூலை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கூலி திரைப்படத்தில் உபேந்திரா "கானன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இவர், நேற்று வரலட்சுமி பூஜையை தடபுடலாக கொண்டாடி உள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள், கவலையே படாதீங்க கூலி திரைப்படம் நிச்சயம் கோடி கோடியா வசூல் கொட்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











