சரியான நேரத்தில் சரியான படம்... வரலட்சுமியின் டேனி டீசர் வெளியீடு!
சென்னை: சரியான நேரத்தில் சரியான படமாக வரலட்சுமியின் டேனி டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நாடே தெலங்கானாவில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து இன்னும் வெளிவரவில்லை. குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது சரியா தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இதே கதைக்களத்தில் உருவான டேனி திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.

வரலட்சுமி சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்குகியுள்ளார். வரலட்சுமியுடன் யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, வேலராமமூர்த்தி நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நாய் ஒன்று நடிக்கிறது. போலீஸ் மோப்ப நாயான அதன் பெயர் தான் டேனி. இந்த படம் முழுவதும் தஞ்சாவூர் பகுதியில் நடக்கும் தொடர் கொலைகள் பற்றிய விசாரணை அடிப்படையில் உருவாகியுள்ளது.
படத்தின் டீசரில், தனது மனைவியை சந்தேகத்தில் எரித்துக் கொன்ற கணவனே வாக்குமூலம் அளிப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. வரலட்சுமியின் பிறந்தநாளான மார்ச் -ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு தற்போது, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் முதன்முறையாக வரலட்சுமிக்கு, "மக்கள் செல்வி" என்ற அடைமொழி வழங்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக்கில் இந்த பட்டத்தோடு வெளியானபோது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.

அதோடு, இந்தப் பட்டம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டது என்றும், தமிழ் சினிமாவில் ஒரேயொரு மக்கள் செல்வி கீர்த்தி சுரேஷ் தான் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பினர். தற்போது புதிய போஸ்டர்களிலும் இதே பட்டத்தோடு வெளியிட்டுள்ளது படக்குழு.


Click it and Unblock the Notifications











