செல்லப்பிராணிகள் மேல 'வரு' காட்ற அன்பு இங்கே இருந்து வந்ததுதான் போல.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை வரலக்ஷ்மியின் தாயார் சயா வீதியில் சுற்றும் நாய்களுக்கு உணவளிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
பெண்கள் பாதுகாப்புக்காக சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார் வரலக்ஷ்மி. சமூகம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

கோரிக்கை
செல்லப் பிராணிகள் மீதும் அன்புக்காட்டி வரும் வரலக்ஷ்மி, ஊரடங்கு உத்தரவின் போது கூட, முடிந்தவர்கள் தெருக்களில் உணவில்லாமல் இருக்கும் நாய்களுக்கு உணவளியுங்கள் என்று வீடியோ வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.
வரு அம்மா
மேலும் செல்லப் பிராணிகளால் கொரோனா பரவாது அவற்றை தயவு செய்து கைவிடாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் அவரது தாயாரான சயா தெருக்களில் உள்ள நாய்களுக்கு உணவளிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதல் மனைவி சயா
இதனை பார்த்த நெட்டிசன்கள் செல்லப்பிராணிகள் மீது வரலக்ஷ்மி காட்ற அன்பு எங்கே இருந்து வந்தது என்பது இப்போதுதான் தெரிகிறது என்று கூறி வருகின்றனர். சரத்குமாரின் முதல் மனைவிதான் சயா. 1984 ஆம் ஆண்டு சயாவை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.

நக்மாவுடன் தொடர்பு
அவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 90களின் நடுவில் சரத்குமாருக்கு தன்னுடன் ரகசிய போலீஸ், அரவிந்தன், ஜானகிராமன் ஆகிய படங்களில் நடித்த நடிகை நக்மாவுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் சரத்குமாரை விவாகரத்து செய்தார் சயா.

ராதிகாவுடன் திருமணம்
பின்னர் 2001 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்தார் சரத்குமார். அவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். சரத்குமாரும் ராதிகாவும் நம்ம அண்ணாச்சி, சூர்யவம்சம் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











