வரலட்சுமி நடிக்கும் புதிய படம் சக்தி... முதல் போஸ்டரை வெளியிட்ட சரத்குமார்!
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நடிக்கும் புதிய படம் சக்தியின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகின.
போடா போடிக்குப் பிறகு பெரிதாக வாய்ப்பில்லாமல் இருந்த வரலட்சுமிக்கு இப்போது பரவலாக வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்துக்குப் பிறகு, விஷாலுடன் சண்டகோழி 2 படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து இப்போது அறிமுக இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கும் சக்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான முதல் போஸ்டர் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இந்த போஸ்டரை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வெளியிட்டார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்தி திரைப்படத்தின் முதல் போஸ்டரை பார்த்து குஷ்பு உள்ளிட்ட பலர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











