மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்.. தாமரை பூவுக்கும் பாட்டுக்கு கூட ஆடுறது யாரு?
சென்னை: நடிகர் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் திடீரென மணக்கோலத்தில் இருப்பதை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். மாப்பிள்ளை யாருப்பா என கொஞ்சம் உற்றுப் பார்த்த நிலையில், ஓ சினிமா ஷூட்டிங்கா என புரிந்து கொண்டனர்.
இயக்குநர் திரு இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வரும் படத்தில் திருமணக் கோலத்தில் இருவரும் நடித்த நிலையில், அந்த செட்டிலேயே ஆட்டம் போட்ட வீடியோவை வரலக்ஷ்மி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹீரோயின் சென்ட்ரிக்: நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். ஓடுதோ இல்லையோ வருஷத்துக்கு பல படங்களில் நடித்து ரிலீஸ் செய்து வருகிறார். சில படங்கள் அவரது நடிப்புக்காக பாராட்டுக்களை அள்ளி வருகிறது. இந்நிலையில், அடுத்து திருவுடன் அவர் இணைந்து நடித்து வரும் படத்தில் அவருடன் சந்தோஷ் பிரதாப் நடித்து வருகிறார்.

மணக்கோலத்தில் வரு: நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாத நிலையில், திடீரென மணக்கோலத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் திருமணமே முடிந்து விட்டதா என ஷாக் ஆகி உள்ளனர். ஆனால், சந்தோஷ் பிரதாப், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோருடன் அவர் டான்ஸ் ஆடுவதை பார்த்து படப்பிடிப்பு என புரிந்து கொண்ட ரசிகர்களுக்கு அவரும் கேப்ஷன் போட்டு இயக்குநர் திரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
தாமரை பூவுக்கும் பாட்டு: லியோ படத்தின் மூலம் மீண்டும் கரு கரு கருப்பாயி மற்றும் தாமரை பூவுக்கும் பாடல்கள் இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், அந்த டிரெண்டில் நாங்களும் ஐக்கியமாகிறோம் என தாமரை பூவுக்கும் பாட்டுக்கு சந்தோஷ் பிரதாப்புடன் நடனம் ஆடும் வீடியோவை நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவிட்டு லைக்குகளை அள்ளி உள்ளார்.
இட்டிஸ் பிரசாந்த் டான்ஸ்: வரலக்ஷ்மியும் சந்தோஷும் ஆடிக் கொண்டிருக்கும் போது கூடவே விமர்சகரும் நடிகருமான இட்டிஸ் பிரசாந்த் எனப்படும் பிரசாந்த் ரங்கசாமி டான்ஸ் ஆடுவது தான் செம காமெடியாக உள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











