சித்திக்கு பதில் நானா...அது நடக்கவே நடக்காது...வதந்திகளை மறுத்த வரலட்சுமி

சென்னை : 80 களில் புகழ்பெற்ற ஹீரோயினாக இருந்த ராதிகா, கடந்த 30 ஆண்டுகளாக பல டிவி சீரியல்களை தயாரித்து, ஹிட்டாக்கி வருகிறார். பலவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் தானே நடித்து, பெரிய வரவேற்பை பெற்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடர், ராதிகாவின் வாழ்க்கையில் முக்கியமானது என்றே சொல்ல வேண்டும். தற்போது சித்தி 2 சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் தான் டிவி சீரியல்களில் இருந்து விலகுவதாக ராதிகா அறிவித்தார்.

அடுத்த சித்தி யார்

அடுத்த சித்தி யார்

சித்தி 2 சீரியலில் இருந்து விலகி உள்ளதால் அடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் மீனா அல்லது ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.

ராதிகாவிற்கு பதில் வரலட்சுமி

ராதிகாவிற்கு பதில் வரலட்சுமி

இது ஒருபுறம் இருக்க, சித்தி 2 சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி நடிக்க இருப்பதாக திடீரென ஒரு செய்தி வைரலானது. ஆனால் இந்தத் தகவலை வரலட்சுமி மறுத்துள்ளார்.

வதந்திகளை மறுத்த வரலட்சுமி

வதந்திகளை மறுத்த வரலட்சுமி

'இது உண்மையல்ல.. வதந்தி. இது போன்ற தவறான தகவல்களை பரப்பாதீர்கள். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவு படுத்தி கருத்து பதிவிட்டு இருக்கிறார் வரலட்சுமி.

தெலுங்கில் பிஸியான வரலட்சுமி

தெலுங்கில் பிஸியான வரலட்சுமி

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் அழுத்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி, தற்போது அவர் நடித்துள்ள நாந்தி என்ற தெலுங்கு படம் ரிலீசாகி உள்ளது. இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X