அந்த நடிகைக்கு பதிலாக வாரிசு நடிகை தரும் என்ட்ரி... ஆட்டமே வேற லெவலில் இருக்க போகுது
நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் அவருக்கு பாராட்டுக்களையும், நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்று தந்தது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நல்ல கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

காதல் திருமணம்: மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரலட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை வரலட்சுமி அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு நேரத்தை செலவிட்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும், தற்போது ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமணத்திற்கு பிறகு நடிப்பேன்: ஹீரோயினாக மட்டும் அல்லாமல் துணிச்சல் மிகுந்த வில்லன் கதாப்பாத்திரத்திலும் வரலட்சுமி மிரட்டி வருகிறார். தெலுங்கு படங்களில் வில்லன், குணசித்திரம் என கதைக்கு ஏற்றார்போல் படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அவரது கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு உள்ளது. திருமணத்திற்கு பிறகு புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் நடிப்பதை நிறுத்தி விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், நடிகை வரலட்சுமி தான் அளித்த சமீபத்திய பேட்டிகளில் திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதற்கான முழு சுதந்திரமும் எனக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் என்ட்ரி தரும் வரலட்சுமி: நடிகைகள் சிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், சிலர் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் வெள்ளித்திரையில் கிடைத்த அறிமுகத்தை விட சின்னத்திரையில் அதிக மக்களின் பேரன்பை பெறுகின்றனர். நடிகைகள் சினேகா, சங்கீதா, குஷ்பூ உள்ளிட்டோர் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும் இடம்பிடிக்க உள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடிடான்ஸ் நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பாபா மாஸ்டர், நடிகைகள் சினேகா, சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். இந்நிலையில், நடிகை சங்கீதா இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக நடிகை வரலட்சுமி சரத்குமார் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக நடுவராக வரலட்சுமி பங்கேற்கிறார். மேலும், டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை இதுவரை ஆர்.ஜே. விஜய் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,
தற்போது, இந்நிகழ்ச்சியை வி.ஜே.மணிமேகலையும் தொகுத்து வழங்க இருக்கிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கான ஆடிஷன் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்துள்ளன. விரைவில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











