'மக்கள் செல்வி' வரலட்சுமிக்கு பிறந்த நாள்.. வித்தியாசமாக கொண்டாடும் வரு!

சென்னை : வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார்.

Recommended Video

Varalakshmi PreB'day Celebration | ReUnion | BindhuMasdhavi | Vikram Prabhu

நடிகை வரலஷ்மி சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். இவர் நாயகியாக அறிமுகமாகி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வில்லியாகவும் தற்போது நடித்து உள்ளார்.

மேலும் பல வேறு மாதிரியான கதைகளத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் வரும் 5 ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

 5ம் தேதி பிறந்த நாள்

5ம் தேதி பிறந்த நாள்

தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு சென்று, அன்று பிறந்த பச்சிளம் குழந்தையை தூக்கி கையில் எடுத்து கொஞ்சி அந்த குழந்தைக்கு பரிசும் கொடுத்து மகிந்துள்ளார். வரலஷ்மி அடம்பிடிக்கும் குழந்தை என்று அவரே ஒரு நேர்காணலின் போது சொல்லியிருக்கிறார். வரலஷ்மி செய்த இந்த செயலினால் வரலஷ்மிக்கு இருக்கும் இளகிய மனது வெளிபட்டிருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். வரலஷ்மி சரத்குமார் மற்றும் சாயா எனும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை.

 போடா போடி நாயகி

போடா போடி நாயகி

இவர் லண்டனில் மேலாண்மையில் முதுகலை பட்டம் முடித்து விட்டு இந்தியாவில் வந்து பணியாற்ற துவங்கினார் இந்த இடத்தில் இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வர மும்பையில் உள்ள ஹிந்தி நடிகர் அனுபம் கேர் நடிப்பு பள்ளியில் படித்து பின் நடிக்க வந்தார். 2012 போடா போடி தான் இவருக்கு முதல் படமாகும். அப்படத்தில் சிம்பவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வரலட்சுமி.

 நல்ல நடிகை

நல்ல நடிகை

நடித்த முதல் படமே நாயகியாக வரலஷ்மியை பெரிய அளவில் மக்களுக்கு எடுத்து செல்லாவிட்டாலும் அதன்பின் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மக்களுக்கு வரலஷ்மியை ஒரு நல்ல நடிகையாய் அறிமுகப்படுத்தியது . வளர்ந்து வரும் நடிகை என்பதனால் இவரின் பிறந்தநாள் பற்றி பலருக்கும் தெரியாது இதனால் சமூக வலைத்தளங்களில் வரலஷ்மியின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

 5ம் தேதி கொண்டாட்டம்

5ம் தேதி கொண்டாட்டம்

இந்த நேரத்தில் வரலஷ்மி குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றது பலரின் கவனத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. மேலும், தனது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். வரலஷ்மி தற்போது கிட்டத்தட்ட 9 படங்களில் நடித்து வருகிறார் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X