அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்?

சென்னை : தமிழைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலக்கி வருகிறார்.

நடிகைகள் பலரும் தயங்கும் கதாபாத்திரங்களை மிக தைரியமாக ஏற்று நடித்து பாராட்டுக்களையும் பெற்று வரும் இவர் இப்பொழுது தமிழில் கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் நடித்த ஒரு சில திரைப்படங்களிலேயே பெரும் வரவேற்பு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்க இப்பொழுது அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆந்திரா தமிழ்நாடு

ஆந்திரா தமிழ்நாடு

ரங்கஸ்தலம் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுகுமாரன் இயக்கும் புஷ்பா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க ஹீரோயினாக நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் ஆந்திரா தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் பல முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்யா வில்லனாக

ஆர்யா வில்லனாக

மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அல்லு அர்ஜுன் ஆர்யா ஏற்கனவே ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறையாக புஷ்பா படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பீரமான நடிப்பை

கம்பீரமான நடிப்பை

கதாநாயகியாக மட்டும் அல்லாமல் குணசித்திர வேடங்களிலும் பட்டையை கிளப்பி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் ஏற்று நடித்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார். குறிப்பாக இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. அந்த அளவிற்கு கம்பீரமான நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி திரையில் அமர்க்களப்படுத்தி வருகிறார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடிக்க வரலட்சுமிக்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சமீபத்தில் வெளியான க்ராக்,நாந்தி போன்ற படங்களில் இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. அதேசமயம் தெலுங்கில் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
புஷ்பா படத்தை தொடர்ந்து முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் வரலட்சுமியை தொடர்ந்து முன்னணி இந்தி நடிகை ஒருவரும் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரட்டலா சிவா அல்லு அர்ஜுன்

கொரட்டலா சிவா அல்லு அர்ஜுன்

தற்போது இயக்கிவரும் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தை தொடர்ந்து கொரட்டலா சிவா அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருக்க வரலட்சுமி இதில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளது தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X