Varalakshmi Sarathkumar : அப்பாவால் பல படவாய்ப்பு பறிபோனது...வரலட்சுமி சரத்குமார் மனம் திறந்த பேட்டி!

சென்னை : தனது அப்பாவால் பல படவாய்ப்புகள் பறிபோனதாக நடிகை வரலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் வரலட்சுமி.

அதன் பின்னர் பல்வேறு படத்தில் கமிட்டான வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Varalakshmi Sarathkumar loses films due to father sarathkumar

வரலட்சுமி சரத்குமார் : பாலிவுட்டை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

வில்லியாக : போடா போடி, தாரைதப்பட்டை போன்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் வரலட்சுமி. கதாநாயகி கதாபாத்திரத்தை விட இவருக்கு வில்லி கதாபாத்திரம் பக்காவாக பொருந்தியது. விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்தபடங்களை தொடர்ந்து இவர் அதிகமாக நெகட்டிவ் கதாபாத்திரத்திலே நடித்து வருகிறார்.

Varalakshmi Sarathkumar loses films due to father sarathkumar

அப்பா அனுமதிக்கவில்லை : சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ரோலில் நடிப்பதற்காக ஷங்கர் சாரிடம் இருந்த அழைப்பு வந்தது. ஆனால், அப்பா அப்போது நடிக்க அனுமதிக்கவில்லை. ஆடிஷன் ஸ்க்ரீனிங் டெஸ்ட் என அனைத்தும் முடிந்துவிட்டது மிகவும் ஆசையாகவும் இருந்தது ஆனால் அப்பா சம்மதிக்கவில்லை.

தெலுங்கில் பிஸி : அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சூப்பர் ஹிட் வெற்றி படமான 'காதல்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது அதையும் அப்பா வேண்டாம், படிப்பு முடிந்ததும் நடிப்பதை பற்றி யோசிக்கலாம் என்றார். இதனால், பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் என்று நடிகை வரலட்சுமி அந்த பேட்டியில் கூறியுள்ளார். நடிகை வரலட்சுமி தமிழ் படங்களைவிட தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X