ஐ லவ் யூ தலைவா..ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்த வரலக்‌ஷ்மி சரத்குமார்!

சென்னை : நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரஜினிகாந்துடன் வளைத்து வளைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் வரலட்சுமி.

அதன் பின்னர் இவர் பல்வேறு படத்தில் நடித்து பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்

வரலட்சுமி சரத்குமார்

பாலிவுட்டை போல தமிழ் சினிமா உலகிலும் காலம் காலமாக தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் சூப்ரீம் ஸ்டாரின் வாரிசான நடிகரான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

வில்லியான அசத்தினார்

வில்லியான அசத்தினார்

இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் இரவின் இவர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

ஐ லவ் யூ தலைவா

ஐ லவ் யூ தலைவா

இந்நிலையில்,வரலட்சுமி சரத்குமார் மற்றும் சரத்குமார் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். இந்த போட்டோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சிறந்த நாள்... இனிமையாகவும் அடக்கமாகவும்...என் தொழில் மற்றும் பணி பற்றி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். ஐ லவ் யூ தலைவா என குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

மேலும், இந்த சந்திப்பில்,சூப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் உடன் இருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் நடித்த பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்தது பற்றியும் ரஜினி கேட்டறிந்தார். இணையத்தில் வெளியான இந்த செல்ஃபி போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X