முதல்முறையாக அப்பா சரத், அம்மா ராதிகாவுடன் நடிக்கும் வரு.. கிடாவுக்காக இப்டி அடிச்சுக்குறாங்களே!
சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படம் பிறந்தாள் பராசக்தி.
சென்னை: வரலட்சுமியுடன் சரத்குமார் மற்றும் ராதிகா இணைந்து நடிக்கும் படத்திற்கு பிறந்தாள் பராசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி ஆகியோர் முதல் முறையாக இணைந்துள்ள படம் தான் பிறந்தாள் பராசக்தி. முழுக்க முழுக்க கிராமத்துக்கு படமான இதனை ராதிகாவின் ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

கிடா சண்டையை மையப்படுத்தி எடுக்கப்படம் இப்படத்தை ஓம் விஜய் என்பவர் இயக்குகிறார். பிறந்தாள் பராசக்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் டைட்டில் ரோலில் வரலட்சுமி நடிக்கிறார்.
ராஜபார்வை, வெல்வட் நகரம், கன்னிராசி, ரனம், சேசிங், டேனி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். கன்னிராசி படத்தில் அவருடன் விமல் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, திரைக்கு வராமல் முடங்கியுள்ளது.

சூர்ய வம்சம், நம்ம அண்ணாச்சி உள்ளிட்ட படங்களில் ராதிகாவும், சரத்குமாரும் சேர்ந்து நடித்திருந்தனர். பல வருடங்கள் கழித்து பிறந்தாள் பராசக்தி படத்தில் அவர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். மணிரத்னம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











