மக்கள் செல்வன் படத்தில் இணைந்த மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமார்.. வேற லெவலில் உருவாகும் மைக்கேல்!
சென்னை: விஜய்சேதுபதி நடித்து வரும் மைக்கேல்" படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

மைக்கேல் படத்தில்
சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவன தயாரிப்பில் உருவாகும், பன்மொழி இந்திய படமான "மைக்கேல்" படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

சந்தீப் கிஷன்
லோகேஷ் கனகராஜின் மாநகரம், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் என பல மொழிகளிலும் வெற்றி பெற்று தனித்துவமான நட்சத்திரமாக அறியப்படுபவர் நடிகர் சந்தீப், அவரது சிறப்புமிக்க திரைக்கதை தேர்வுகள் அவரை சிறந்ததொரு நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. மைக்கேல் படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் சந்தீப் கிஷன்.

ரஞ்சித் ஜெயக்கொடி
விஜய்சேதுபதியின் புரியாத புதிர் மற்றும் ஹரிஷ் கல்யாணின் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்த படத்தை பான் இந்திய படமாக இயக்கி வருகிறார். இதில், சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

திவ்யன்ஷா கெளசிக்
மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படம் துவங்கப்பட்டதிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அறிவிப்பிலும், படம் மிகப்பிரமாண்ட நிலையை எட்டி வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார்.

மக்கள் செல்வி
தற்போது இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

கெளதம் மேனன்
டிரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம், பாவக் கதைகள், குட்டி ஸ்டோரி என தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் கெளதம் மேனன் ஏகப்பட்ட படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். இந்நிலையில், மைக்கேல் படத்திலும் வில்லத்தனத்தில் அவர் மிரட்டப் போகிறார்.


Click it and Unblock the Notifications











