மத்த விஷயத்துக்கு ரூம் போடணுமான்னு கேட்டான்.. அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை குறித்து ஓபனாக பேசிய வரலக்ஷ்மி
சென்னை: சினிமாவில் நடிகைகளுக்கு தொடர்ந்து இந்த அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை மற்றும் பட வாய்ப்புக்காக படுக்கை அறைக்கு அழைக்கும் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கின்றன.
முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட யாருமே சினிமாவில் நடிகைக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை தீர்க்க எந்தவொரு நடவடிக்கையும் பெரிதாக எடுத்ததாகவே தெரியவில்லை.
கொன்றால் பாவம் படத்தில் நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார் சமீபத்தில் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நயன்தாராவுக்கே டார்ச்சர்
கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை நயன்தாரா ஒரு பெரிய நடிகர் படத்தில் நடிக்க தன்னையே அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர் செய்தனர் என்கிற பகீர் தகவலை சொல்லி பரபரப்பை கிளப்பினார். பின்னர், தான் அதற்கு நோ சொல்லி விட்டு அந்த பட வாய்ப்பே வேண்டாம் என ஒதுங்கி விட்டேன் என்றும் கூறியிருந்தார்.

வரலக்ஷ்மியையும் விடல
வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் கொன்றால் பாவம் திரைப்படம் வெளியானது. அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தனக்கும் இது போன்ற மோசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றை நடத்த
சன் டிவி மற்றும் ஜெயா டிவிகளில் ரியாலிட்டி ஷோக்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வரலக்ஷ்மி சரத்குமார் நடத்தி வந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவை நடத்த வரலக்ஷ்மி சரத்குமாரிடம் ஒரு நபர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

மத்த விஷயத்துக்கு ரூம் போடவா
ஷோ பற்றியும் வரலக்ஷ்மி சரத்குமார் சம்பளம் பற்றியும் பேசிய அந்த நபர் கடைசியாக மத்த விஷயங்களுக்கு ஹோட்டலில் ரூம் போடவா என வரலக்ஷ்மி சரத்குமாரிடமே கேட்ட நிலையில், அவர் பயங்கர ஷாக் ஆகி அந்த நபரை உடனடியாக வீட்டை விட்டு கிளம்ப சொல்லி விட்டேன் என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

என்னிடமே இப்படின்னா
இது பற்றி என் தோழியிடம் சொன்ன போது, அவனை சும்மாவா விட்டு, நாலு அறை விட வேண்டியது தானே எனக் கேட்டாள். ஆனால், அந்த நேரத்தில் பெரிய பேக்கிரவுண்ட் உள்ள என்னிடமே இப்படி கேட்கிறான்னா, இளம் நடிகைகளின் நிலைமை என்ன என யோசித்ததும் ஷாக் ஆகி அவனை வெளியே போக சொல்லிட்டேன் என தோழிக்கு கொடுத்த விளக்கத்தையும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

செம பிசி
இந்த ஆண்டு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலக்ஷ்மி சரத்குமார் சமீபத்தில் வெளியான கொன்றால் பாவம் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார். மேலும், கைவசம் ஏகப்பட்ட படங்களில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். நடிகர் சரத்குமாரின் மகளுக்கே இப்படியொரு நிலைமை என்றால் கோலிவுட்டில் சினிமா ஆசையுடன் வரும் இளம் பெண்களுக்கு என்ன என்ன பிரச்சனைகள் இருக்கும் என்றும் அதை தீர்க்க முன்னணி நடிகர்கள் முன் வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











