என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க... பிரபல நடிகரின் மகளுக்கே இந்த நிலையா..?
சென்னை: 2012ம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.
முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
தாரை தப்பட்டை, சண்டைக் கோழி 2, விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் வரலட்சுமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில், சினிமாவில் நடிக்க தன்னையும் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் என வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

தாரை தப்பட்டை வரலட்சுமி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துவந்த வரலட்சுமிக்கு, பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை மிகப் பெரிய அடையாளம் கொடுத்தது. அதேபோல், புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் ரிலீஸான விக்ரம் வேதா படமும் வரலட்சுமிக்கு தரமான கம்பேக்காக அமைந்தது.

விஷாலுடன் காதல்?
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் லீடிங் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டினார். அதேபோல் சண்டைக்கோழி 2 உள்ளிட்ட சில படங்களில் நெகட்டிவான ரோல்களில் நடித்தும் மிரட்டினார். இதனிடையே நடிகர் விஷாலும் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட்
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் பல பிரச்சினைகள் எனக்கும் நடந்துள்ளது. ஹீரோ, டைரக்டர் இவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமா எனக் கேட்டுள்ளனர். எனக்கு அப்படிபட்ட வாய்ப்புகள் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன். எந்தவொரு குற்றஉணர்வும் இல்லாமல் இரவில் நிம்மதியா தூங்க வேண்டும். நடிக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

நடிகரின் மகளுக்கே இந்த நிலையா?
கடந்த சில மாதங்களாகவே சினிமாவில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள், அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகைகளான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைக் கூறியுள்ளனர். இந்நிலையில், முன்னணி நடிகரான சரத்குமாரின் மகளான வரலட்சுமியே அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











