மர்மநபர்கள் கைவரிசை.. பிரபல நடிகையின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கம்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

By

சென்னை: தனது சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். சிம்பு ஹீரோ.

தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

இதைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி 2, விஜய்யின் சர்கார் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஆகிறார்

இயக்குனர் ஆகிறார்

தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்கி நடிப்பதாக செய்தி வெளியானது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

முடக்கி உள்ளனர்

முடக்கி உள்ளனர்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி, சமூக பிரச்சினைகள் குறித்த கருத்துகளை, தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், அவருடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை யாரோ முடக்கி உள்ளனர்.

எச்சரிக்கையாக இருங்கள்

எச்சரிக்கையாக இருங்கள்

இதை வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு முடக்கப்பட்டுள்ளன. அதை மீட்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை என் சமூக வலைதள கணக்குகளில் வரும் பதிவுகள், செய்திகள் பற்றி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

Recommended Video

KannaMoochi First Look • Varalakshmi Sarathkumar Debut Direction | Women Power | Filmibeat Tamil
அதிகரித்து வருகிறது

அதிகரித்து வருகிறது

நிலைமை சீரானதும் நானே தெரிவிக்கிறேன். தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். சினிமா நடிகர், நடிகைகளின் சமூக வலைதளக் கணக்குகளை ஹேக் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X