ஹேப்பி பர்த்டே பாப்பா.. இதனால் தான் வரலக்ஷ்மிக்கு மக்கள் செல்வி பட்டம் கிடைத்ததா?

சென்னை: மக்கள் செல்வி என்று பாசத்தோடு அழைக்கப்படும் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாரின் 35வது பிறந்த நாள் இன்று.

Recommended Video

Varalakshmi PreB'day Celebration | ReUnion | BindhuMadhavi | Vikram Prabhu

நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்‌ஷ்மி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

சண்டக் கோழி 2 மற்றும் சர்கார் படங்களில் திடீரென வில்லி அவதாரம் எடுத்த வரலக்‌ஷ்மி, நாளை வெளியாகும் வெல்வட் நகரம் படத்தின் மூலம் மீண்டும் நாயகியாக கம்பேக் ஆகிறார்.

வரலக்‌ஷ்மியின் அம்மா

வரலக்‌ஷ்மியின் அம்மா

சமீபத்தில், நடிகை ராதிகா சரத்குமாரை ஆன்ட்டி என்று தான் அழைப்பேன் என வரலக்‌ஷ்மி கொடுத்த ஸ்டேட்மென்ட் சமூக வலைதளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரலக்‌ஷ்மி சரத்குமார், கடந்த 1985ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி சரத்குமார் மற்றும் சாயா சரத்குமாருக்கு மகளாக பெங்களூரில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

எத்தனை வயசு

எத்தனை வயசு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான வரலக்‌ஷ்மி சரத்குமார், இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வரலக்‌ஷ்மி சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் செல்வி

நடிகர் விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் பட்டம் கிடைத்துள்ள நிலையில், வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு மக்கள் செல்வி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. துணிச்சலும், தைரியமும் மிக்க வரலக்‌ஷ்மி சரத்குமார், பெண்களுக்கான அமைப்பாக சக்தி எனும் சேவை அமைப்பை நடத்தி வருகிறார். யாருக்கும் அஞ்சாமல் தன் வழியில் சரியாக நடந்து வருவதாலே மக்கள் அவரை மக்கள் செல்வி என அழைக்கின்றனர்.

பாப்பா

விஷாலின் சண்டக்கோழி, விஜய்யின் சர்கார் படங்களில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார் வரலக்‌ஷ்மி சரத்குமார். பொதுவாக நாயகியாக நடித்து வரும் யாரும், வில்லி ரோல் எனும் ரிஸ்கை எடுக்க தயங்குவர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது நடிப்பை வெளிகாட்டிய பாப்பாவுக்கு, சன் பிக்சர்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

வெல்வட் நகரம்

வெல்வட் நகரம்

2018ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்த வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு கடந்த ஆண்டு சரியான படங்கள் அமையவில்லை. இந்நிலையில், வரலக்‌ஷ்மி சரத்குமார், நடித்துள்ள ஹீரோயின் சென்ட்ரிக் படமான வெல்வெட் நகரம் நாளை திரைக்கு வருகிறது. படத்தின் ப்ரீமியர் காட்சிகளை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X