வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பரா ஸ்டெப் போட்ட வரலட்சுமி சரத்குமார்… வைரலாகும் வீடியோ!
சென்னை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் , சாந்தனு, அர்ஜூன் தாஸ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல், பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அனைவரையும் ஆடவைத்துள்ளது.
வெளியானது முதல் இன்று வரை வைரலாக உள்ள இந்த வாத்தி கம்மிங் பாடலுக்கு வரலட்சுமி சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

200கோடி வசூல்
தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் திரைப்படம் வெளியான 10 நாட்களிலேயே உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

டிரெண்டிங் சாங்
இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது என்றால், படம் வெளியாகி பல மாதங்கள் ஆனது என்றாலும், வாத்தி கம்மிங் பாடல் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடலுக்கு நடனமாடி இப்பாடலை மேலும் பிரபலமாக்கி வருகின்றனர்.

வாத்தி கம்மிங் ஹேஷ்டேக்
இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடல் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #Vaathicoming100Views என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கினர்.
சூப்பரா ஒரு குத்தாட்டம்
இப்பாடலுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் நடனமாடி வருகின்றனர். தற்போது பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், திருமண நிகழ்ச்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சூப்பராக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடைய வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications