வரலட்சுமியை பெண்டு நிமிர்த்தும் கணவர்… யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகை!

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது வரலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து ரசிகர்கள், பாவம்பா இந்த பொண்ணு என்று உச்சுகொட்டி வருகின்றனர்.

சரத்குமாரின் மகளாக இருந்தாலும், தனது திறமையால் முன்னுக்கு வந்தவர் தான் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக நடித்து, முதல் படத்திலேயே தனது சொந்தக்குரலில் பேசி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழைத் தாண்டி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

varalakshmi nicholai sachdev gym

தாய்லாந்தில் திருமணம்: பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் வரலட்சுமிக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுடன் மும்பையில் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், சென்னையில் நடைபெற உள்ள வரவேற்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், பிரபு, அர்ஜூன், சமந்தா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

பாவம்பா வரலட்சுமி: தனது14 ஆண்டுகளாக கால காதல் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், தனது இன்ஸ்டாகிராமில் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். பின் அந்த உடற்பயிற்சியால் கால்வலியுடன் உக்காரக்கூட முடியாமல் அவதிப்படுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அப்பாவும் உடற்பயிற்சியில் ஈடுபாடு கொண்டவர், கணவரும் ஈடுபாடு கொண்டவர். இரண்டு பேர் கிட்ட மாட்டிக்கிட்டு இந்த பொண்ணு படாதபாடு படுதுப்பா என்று கருத்துக்களை பகிரந்து வருகின்றனர்.

varalakshmi nicholai sachdev gym

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X