Varalakshmi Sarathkumar: எங்கப்பாவுக்கு ஜோடியா நான் நடிக்கணுமா? கடுப்பான வரலக்‌ஷ்மி சரத்குமார்!

சென்னை: பிக் பாஸ் ஆரவ் உடன் இணைந்து வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்துள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடியில் விரைவில் வெளியாகிறது.

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளியான கொன்றால் பாவம் படத்தில் நடித்த வரலக்‌ஷ்மி சரத்குமார் மிண்டும் அதே இயக்குநர் இயக்கி உள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தில் நடித்துள்ளார்.

Varalakshmi Sarathukumar gets angry at Maruthi Nagar Police Station movie press meet

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் டென்ஷன் ஆகி விட்டார்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்: வரலக்‌ஷ்மி சரத்குமார் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தாலும், சோலோவாக கிடைக்கும் சிறு பட்ஜெட் படங்களில் உமன் சென்ட்ரிக் ரோல்களிலும் வில்லியாகவும் நடித்து மிரட்டி வருகிறார்.

இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகி உள்ள மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் ஆஹா ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில், அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது.

Varalakshmi Sarathukumar gets angry at Maruthi Nagar Police Station movie press meet

பிக் பாஸ் ஆரவ் உடன்: மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் பிக் பாஸ் ஆரவ் உடன் இணைந்து நடித்துள்ளார் வரலக்‌ஷ்மி சரத்குமார். பிரஸ் மீட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆரவ்வும் அழகாக பதில் அளித்து வந்தார்.

ஹீரோவாக அறிமுகமான ஆரவ்வுக்கு சரியாக படங்கள் போகாத நிலையில், கலகத் தலைவன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக மகிழ் திருமேனி படத்தில் மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Varalakshmi Sarathukumar gets angry at Maruthi Nagar Police Station movie press meet

எங்கப்பாவுக்கு ஜோடியா நடிக்கணுமா?: நடிகர் சரத்குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், அப்பாவுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நடிப்பீங்களா என கேட்க வந்து குழம்பிப்போன பத்திரிகையாளர் கேட்ட கேள்வியை பிடித்துக் கொண்டு எங்கப்பாவுக்கு ஜோடியா நான் நடிக்கணுமா? என கேள்வி கேட்டு டென்ஷன் ஆகி விட்டார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

அது இல்லைங்க மேடம் ரஜினி, விஜய்க்கு வில்லியாக நடிப்பீங்களான்னு அந்த பத்திரிகையாளர் கேள்வியை மாற்ற, செம கடுப்பில் இருந்த வரலக்‌ஷ்மி சரத்குமார் ஏற்கனவே விஜய்க்கு வில்லியா சர்க்கார் படத்தில் நடிச்சிட்டேன். ரஜினி சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா பண்ணுவேன். நான் ஒரு நடிகை இந்த ரோல் பண்ண மாட்டேன். அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் என வசமாக சிக்கியவரை வெளுத்து வாங்கி விட்டார்.

Varalakshmi Sarathukumar gets angry at Maruthi Nagar Police Station movie press meet

பல படங்களில் நடிக்கும் சரத்குமார்: பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்த சரத்குமார் தொடர்ந்து விஜய்யின் வாரிசு, ராகவா லாரன்ஸின் ருத்ரன், பொன்னியின் செல்வன் 2, வெங்கட் பிரபுவின் கஸ்டடி என பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவர் கைவசம் அரை டஜன் படங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X