“நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை.. "... வாரிசு நடிகை அதிரடி அறிவிப்பு..!

நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை: தான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என நடிகை வரலட்சுமி அறிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், சண்டைக்கோழி, சர்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும் நடித்தார்.

தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி ராசி படத்தில், நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் கன்னிராசி பட விழாவில் பேசிய வரலட்சுமி, தான் திருமணம் செய்துக்கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

எனர்ஜி டீம்:

எனர்ஜி டீம்:

"பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும்.

திருமணமே வேண்டாம்:

திருமணமே வேண்டாம்:

இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

புது அனுபவம்:

புது அனுபவம்:

நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்", என்றார்.

காதல் கிசுகிசு:

காதல் கிசுகிசு:

நடிகர் விஷாலுடன் காதல் என வரலட்சுமி பெயர் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை இருவரும் உறுதி செய்யவில்லை. விஷாலுக்கு, ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் அக்டோபர் மாதம் திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X