விஷால் பட்ட கஷ்டம்.. சாப்பிடவே இல்ல.. எமோஷனலான வரலட்சுமி

சென்னை: விஷாலுக்கு கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லை.மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷனில் அவர் கலந்துகொண்டபோது இந்த விஷயம் வெளியே தெரிந்தது. கைகள் நடுங்கியபடியும், உடல் தளர்ந்தபடியும் இருந்த அவரை பார்த்தபோது பலரும் கலங்கியே போனார்கள். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி விஷால் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரொம்பவே எமோஷனலாக பேசியிருக்கிறார்.

செல்லமே படத்தில் நடிகராக அறிமுகமான விஷால் கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வரக்கூடிய அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தாலும் ஏனோ இடையில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அவர் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்தார். அந்தப் படத்தை ஹரி இயக்கியிருந்தார். படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் விஷாலின் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பின.

vishal varalakshmi madhagajaraja

மார்க் ஆண்டனி: அந்தப் படத்துக்கு முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் சக்கைப்போடு போட்டது. டைம் ட்ராவல் ஜானரில் உருவான அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா வரவேற்பை பெற்றது. மேலும் உலகளவில் 100 கோடி ரூபாயை அந்தப் படம் வசூலித்ததாகவும்; விஷாலின் இத்தனை வருட கரியரில் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்த முதல் படம் இதுதான் என்றும் கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சுக்கள் எழுந்தன.

மதகஜராஜா: இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் நடித்தார் விஷால். அதில் அவருடன் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்தனர். எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஷூட்டிங் முடிந்தாலும் ரிலீஸில் சிக்கல் வந்ததால் படம் பரணுக்கு சென்றது. ஒருவழியாக ரிலீஸ் சிக்கல் தீர்ந்ததன் காரணமாக 13 வருடங்கள் கழித்து நாளை படம் ரிலீஸாகவிருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து ரிலீஸானாலும் படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்று படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

விஷாலின் உடல்நிலை: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷாலுக்கு உடல்நிலை சுத்தமாக சரியில்லை. விஷாலை பார்த்த ரசிகர்கள் நம்ம விஷாலா இவர் என்று அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் ஒருதரப்பினர் விஷாலுக்கு பெரிய நோய் வந்துவிட்டதாக கதை கட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு வைரல் காய்ச்சல்தான் வந்திருக்கிறது என்று அவரது மருத்துவர் தரப்பிலிருந்து அறிக்கை வந்ததையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

வரலட்சுமி பேட்டி: இந்நிலையில் நடிகை வரலட்சுமி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "மதகஜராஜா படம் முழுக்க முழுக்க காமெடியாகத்தான் செல்லும். மக்கள் நிச்சயம் படத்தை ரசிப்பார்கள். அந்தப் படத்துக்காக எல்லோருமே கஷ்டப்பட்டோம். அதுவும் விஷால் எல்லாம் 8 பேக்ஸ் வைத்திருந்தார். சாப்பிடாமல்கூட சண்டை காட்சிகளில் நடித்துக்கொண்டிருப்பார். இப்போது அவரது உடல்நிலை சரியில்லை. காய்ச்சல் என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக விரைவில் அவர் நலமுடன் திரும்பி வருவார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X