பெரிய நடிகரை பகைத்துக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார்

By Siva

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் மோதுகிறார் வரலட்சுமி சரத்குமார்.

திரையுலகில் வரலட்சுமி சரத்குமாரின் வழியே தனி வழி. ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்பார், வில்லியாக மாறச் சொன்னாலும் செய்வார். அதனாலேயே இயக்குநர்களுக்கு பிடித்த நடிகையாக உள்ளார்.

Varalakshmi to act as baddie in Balakrishna movie

இந்நிலையில் தெலுங்கு திரையுலகிலும் வில்லத்தனம் செய்யப் போகிறார். ஜெய் சிம்ஹா படத்தை அடுத்து கே.எஸ். ரவிக்குமார் பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார்.

ஜெய் சிம்ஹாவை தயாரித்த கல்யாண் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு வில்லியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த படத்தில் ஜெகபதி பாபுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

வரலட்சுமி சந்தீப் கிஷனின் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல். தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அடுத்து தான் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கோலிவுட்டை போன்றே டோலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வருவார் வரலட்சுமி என்பதில் சந்தேகமே இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X