ஸ்ரேயாவின் கரகத்தை வரலட்சுமி தலைக்கு மாற்றிய பாலா...

சென்னை: கரகாட்டத்தை மையப்படுத்தி பாலா எடுக்கவுள்ள படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரதேசியைத் தொடர்ந்து டைரக்டர் பாலா கரகாட்டத்தை மையப்படுத்தி தனது அடுத்தப் படத்தை எடுக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார்.

பெயரிடப்படாத இப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப் பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் கரகாட்டக்காரி கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமியை பாலா அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நடனம் தெரிந்த நாயகி....

நடனம் தெரிந்த நாயகி....

நடிகர் சரத்குமார் மகளான வரலட்சுமி சிறந்த நடனக் கலைஞரும் கூட. அவரின் நாட்டிய திறமைக்காகதான் அவரை தனது போடா போடியில் சிம்பு நடிக்க வைத்தார். தற்போது அதே திறமையால் தான் பாலா படமும் வரலட்சுமி கைக்கு வந்துள்ளது.

ஒத்து வரவில்லை...

ஒத்து வரவில்லை...

வரலட்சுமிக்கு முன்னதாக ஸ்ரேயா, ‘லைப் ஆப் பை'நாயகி ஸ்ரவந்தி ஆகியோரையும் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார் பாலா. ஆனால், அவர்கள் யாரும் கதைக்குப் பொருந்தவில்லை போலும்.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு...

மீண்டும் கிடைத்த வாய்ப்பு...

ஏற்கனவே, அவன் இவன் படத்தில் வரலட்சுமியை நடிக்க வைக்க பாலா முயற்சி செய்தார். அப்போது அம்முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில், கரகாட்டத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் உள்ளூர் கதாநாயகி நடித்தால் நன்றாக இருக்கும் என பாலா விரும்பியதன் விளைவாகவே வரலட்சுமி ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

பாலா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் வரலட்சுமி. தலையில் கரகம் இல்லாமலேயே மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருக்கிறாராம்.

நான் கடவுள் படத்துக்காக....

நான் கடவுள் படத்துக்காக....

நான் கடவுள் படத்துக்காக பலரை குருட்டுப் பிச்சைக்கரர்களாக்கிய பாலா, நடிகை கார்த்திகாவை பிச்சைக்காரி வேடத்துடன் நிஜமாகவே பிச்சையெடுக்க வைத்து, பின்னர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X