என்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி
ஐதராபாத் : என்டிஆர் பாலகிருஷ்ணா தனது 61வது பிறந்ததினத்தை நேற்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் நடிகை வரலஷ்மி நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் ஹீரோயினாகவா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

தென்னிந்திய மொழி படங்களில் பிசி
நடிகை வரலஷ்மி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய மிரட்டலான நடிப்பால் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டத்திற்கு சொந்தக்காரராய் வரலஷ்மி உள்ளார். தற்போது தமிழில் காட்டேறி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

61வது பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார் வரலஷ்மி. நேற்றைய தினம் அவரது 61வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கழிந்துள்ளது. முன்னணி தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர், நடிகைகள் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
Recommended Video

வரலஷ்மி ஒப்பந்தம்
இந்நிலையில் அவரது அடுத்த படத்தில் நடிகை வரலஷ்மி நடிப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோபிசந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோபிசந்த் இயக்கத்தில் முன்னதாக க்ராக் படத்தில் வரலஷ்மி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரக்டர் குறித்து தகவல் இல்லை
ஆனால் இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சூட்டிங் துவங்கியவுடன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











