Varalakshmi: தல தீபாவளி கொண்டாடிய வரலட்சுமி.. தீபாவளி சீர் கொடுத்த ராதிகா சரத்குமார்!

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய 14 வருட நண்பரான நிக்கோலாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்கள் குடும்பத்தோடு முதல் தல தீபாவளியை கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது

நடிகை வரலட்சுமிதமிழ்,தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் இடையே பழக்கம் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன்கடந்த மார்ச் மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத்தொடர்ந்து தாய்லாந்தில் கடற்கரையோரம் பந்தல் போட்டு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

varalaxmi nicholai sachdev

நடிகை வரலட்சுமி சரத்குமார்: இதையடுத்து, சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் ஹல்தி, சங்கீத், வரவேற்பு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடந்தது. சங்கீத் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.

தல தீபாவளி: இந்நிலையில், வரலட்சுமி மற்றும் நிக்கோலய் சச்தேவ் தம்பதியினர் குடும்பத்தோடு நேற்று தல தீபாவளி கொண்டாடினார்கள்.தீபாவளிக்கு முன்னதாகவே ராதிகா சரத்குமார், வரலட்சுமிக்கு தீபாவளி சீர் கொடுத்து அவர்களை வீட்டுக்கு அழைத்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

varalaxmi nicholai sachdev

நிக்கோலாய் சச்தேவ்: வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிக்கோலாய் சச்தேவ், மும்பையில் ஆர்ட் கேலரிஸ்ட் வைத்து இருக்கிறார். நிக்கோலாய், வரலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்கு முன், மாடலும், பயிற்சியாளருமான கவிதாவை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு காஷா என்ற மகளும் உள்ளனர்.பின் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்ததை அடுத்த, தற்போது வரலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X