தல பொங்கல் அதுவுமா புது மாப்பிள்ளையை ஒதுக்கி வைத்த சரத்குமார்.. பாவம்.. எப்படி நிக்கிறாரு பாருங்க!

சென்னை: கடந்த ஆண்டு கோலிவுட்டில் ஏகப்பட்ட பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அவர்களுக்கு எல்லாம் தல பொங்கலாக மாறியுள்ளது. நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், அதிதி ராவ், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் தல பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

தல பொங்கல் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை வரலட்சுமி சரத்குமார் ஷேர் செய்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோவில் சூர்ய வம்சம் படத்தின் காட்சியை ஒட்டுமொத்த குடும்பமும் ரீக்ரியேட் செய்திருப்பது தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

sarathkumar varalaxmi sarathkumar pongal 2025

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான படம் தான் சூர்ய வம்சம். அதன் 2ம் பாகத்தை விரைவில் எடுக்கப் போவதாக சரத்குமார் சமீபத்தில் அறிவித்து இருந்தார். நாட்டாமை மற்றும் சூர்ய வம்சம் படங்கள் சரத்குமாருக்கு ஆல் டைம் ஃபேவரைட் படங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

sarathkumar varalaxmi sarathkumar pongal 2025

மத கஜ ராஜா வெற்றி: நடிகை வரலட்சுமி சரத்குமார், விஷால் உடன் இணைந்து நடித்த மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியான நிலையிலும், ரசிகர்களை கவர்ந்து தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது. விஷாலுக்காகவும் சுந்தர். சிக்காகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார், அஞ்சலியுடன் இணைந்து பட புரமோஷன்களிலும் கலந்துக் கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

sarathkumar varalaxmi sarathkumar pongal 2025

தல பொங்கல் கொண்டாடும் வரலட்சுமி சரத்குமார்: கடந்த ஆண்டு தனது காதலர் நிக்கோலாய் சச்தேவை தாய்லாந்தில் திருமணம் செய்துக் கொண்ட வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து தனது கணவருடன் இணைந்து கொண்டு ஜாலியான ரீல்ஸ்களை போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். தான் ரசிகர்களுடன் சரியாக போட்டோஸ் எடுக்கவில்லை என்றால் கூட தனது கணவர் அனைவருடனும் நின்று போட்டோக்களை எடுத்து வருகிறார் என்றார். இந்நிலையில், இந்த பொங்கலை தல பொங்கலாக தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

sarathkumar varalaxmi sarathkumar pongal 2025

சூர்யவம்சம் சீன்: நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், சாயா தேவி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அனைத்து குடும்பமும் ஒன்றாக க்ரூப் போட்டோ எடுக்க ரெடியாக இருக்க, உங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் வந்தாச்சான்னு போட்டோகிராஃபர் கேட்க, எங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் வந்தாச்சு என சரத்குமார் சொல்ல, சின்ராசு போல ஒரு ஓரமாக வரலட்சுமி சரத்குமாரின் கணவர் நிற்கும் செம காமெடியான வீடியோ இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.

sarathkumar varalaxmi sarathkumar pongal 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X