உங்களோட வளர்ப்பு சரியில்லை.. விஷாலை சரமாரியாக வெளுத்து வாங்கிய வரலட்சுமி

By Siva

Recommended Video

வீடியோ வெளியிட்ட விஷாலை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் விளாசியுள்ளார்.

சென்னை: நடிகர் சங்க தேர்தலையொட்டி வீடியோ வெளியிட்ட விஷாலை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் விளாசியுள்ளார்.

நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணி சார்பில் தயாரிக்கப்பட்ட வீடியோவை விஷால் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரை கேவலமாக விமர்சித்திருந்தார்கள்.

Varalaxmi Sarathkumar blasts Vishal

வீடியோவை பார்த்தவர்கள் என்ன இந்த விஷால் அடுத்தவர் காலை வாரிவிட்டு முன்னேறப் பார்க்கிறார். ஓட்டு வேண்டும் என்றால் அவர் செய்ததை மட்டும் சொல்லி கேட்க வேண்டியது தானே என்று விமர்சித்தார்கள்.

இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்த வரலட்சுமி சரத்குமாரால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. வீடியோ மற்றும் விஷால் குறித்து வரலட்சுமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டியர் விஷால்,

உங்களின் சமீபத்திய தேர்தல் பிரச்சார வீடியோவில் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளீர்கள் என்பதை பார்த்து கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. எதையும் நிரூபிக்க முடியாத போதிலும் என் தந்தையின் கடந்த காலத்தை நீங்கள் தொடர்ந்து குறி வைப்பது கவலை அளிக்கிறது.

சட்டம் தான் உயர்ந்தது என்று நீங்கள் கூறி வருகிறீர்கள். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் இந்நேரம் தண்டனை கிடைத்திருக்கும். தன்மையுடன் நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இது போன்ற சீப்பான வீடியோக்களை உருவாக்குவதன் மூலம் உங்களின் தராதரம் தெரிகிறது. அதனால் உங்களை குறை சொல்வதற்கு இல்லை. இது உங்களின் வளர்ப்பை காட்டுகிறது.

நீங்கள் பெரிய ஞானி போன்று நடந்து கொள்ள வேண்டாம். உங்களின் இரட்டை வேடம், பொய்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் அவ்வளவு நல்லவராக இருந்தால் உங்களின் பாண்டவர் அணியில் இருந்தவர்கள் அதில் இருந்து விலகி உங்களுக்கு எதிராக வேறு ஒரு அணியை உருவாக்கியிருக்க மாட்டார்கள். நீங்கள் செய்தவற்றை நினைத்து பெருமைப்பட்டால் அதை மட்டும் சொல்ல வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு இம்முறை தேர்தலில் தலையிடாத என் தந்தையை பற்றி ஏன் பேச வேண்டும்.

இதுவரை நான் உங்கள் மீது மதிப்பு வைத்திருந்தேன். ஒரு தோழியாக உங்களுக்கு ஆதரவாக இருந்தேன். ஆனால் நீங்கள் ஓவராக செய்துவிட்டீர்கள்...நீங்கள் செய்ததை வைத்து பாசிட்டிவாக வீடியோவை எடுக்காமல் கீழ்த்தரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் நிஜத்தில் தான் உண்மையான நடிகர்... நீங்கள் சொல்வது போன்று வாய்மை வெல்லும். என் வாக்கை இழந்துவிட்டீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X