Varalaxmi Wedding: தாய்லாந்தில் தாலி கட்டிய வரலட்சுமி சரத்குமார்.. மாப்பிள்ளை ஜம்முன்னு இருக்காரே!

சென்னை: வேட்டி சட்டையில் WWE வீரர் உட்கார்ந்து இருப்பது போல தாய்லாந்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய நிலையில், மணக்கோலத்தில் மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் தனது மனைவியுடன் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

varalaxmi sarathkumar honeymoon nicholai sachdev

அரசியல் தலைவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டு வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்தினர். திருமணத்தை தாய்லாந்தில் ஒரு தனித்தீவில் சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடத்திய வரலட்சுமி சரத்குமார் அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

பட்டு வேட்டி, பட்டு சேலை: தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றாலும் இந்திய முறைப்படித்தான் வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துக் கொண்டார். நிக்கோலாய் சச்தேவ் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மாப்பிள்ளையாக மாஸ் காட்ட பட்டுச் சேலையில், அழகான மணப்பெண்ணாக வரலட்சுமி சரத்குமார் மணமேடையில் அமர்ந்திருப்பதே அத்தனை அழகாக உள்ளது.

varalaxmi sarathkumar honeymoon nicholai sachdev

தாய்லாந்தில் திருமணம்: சென்னையில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவின் மெஹந்தி, சங்கீத் மற்றும் ரிசப்ஷன் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், திருமணம் தாய்லாந்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நிக்கோலாய் சச்தேவ் தனது மனைவி வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய தருணங்களும் சரத்குமார், சாயா தேவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அட்சதை போட்டு மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

சிகப்பு கலர் பட்டு: யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு ரெட் கலர் தான் சூட் ஆகும் என தனுஷ் சொல்வது போல வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்தை முன்னிட்டு சிகப்பு நிற பட்டுச் சேலை அணிந்துக் கொண்டு மணமகளாக அந்த பெரிய குடும்பத்தின் கூட்டத்தில் தனித்துவமாக தெரியும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அவரது பட்டுச் சேலை பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறுகின்றனர்.

varalaxmi sarathkumar honeymoon nicholai sachdev

ட்ரீம் வெட்டிங்: பெரிய மண்டபம் எல்லாம் எடுத்து திருமணம் செய்யாமல், தாய்லாந்தில் கடற்கரை அருகே மணமேடை செட் போட்டு ட்ரீம் வெட்டிங்கை நடத்திய வரலட்சுமி சரத்குமார் அங்கேயும் மாடர்ன் உடையை அணிந்துக் கொண்டும் ஒரு ரிசப்ஷனையும் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

varalaxmi sarathkumar honeymoon nicholai sachdev

ராயன் படத்தில்: இந்த ஆண்டு வரலட்சுமி சரத்குமார் நடித்த ஹனுமான் திரைப்படம் தெலுங்கில் வெளியாகி 300 கோடி வசூலை ஈட்டியது. அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமண பிசியில் இருப்பதால் ராயன் படத்தின் புரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X