வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி
வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் அரசி.
வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு,அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி,சிவா மதன்,சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆவடி சே.வரலட்சுமி ஒரு பாடலை எழுதியுள்ளார். நதியே அடங்காதே அணைக்குள் முடங்காதே... என்று பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பாடலை எழுதியிருக்கிறார்.
அண்ணன மிஞ்ச இங்க யாரும் இல்லை...எனும் துள்ளல் இசை பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார் என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











