ரணகளத்துலயும் குதூகலம்... செல்ல நாய்க்குட்டியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய வரூ!
சென்னை : நடிகை வரலஷ்மி சரத்குமார் தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
சமூக வலைதளங்களிலும் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். பல்வேறு சமூக நிகழ்வுகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தன்னுடைய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

சரத்குமார் மகள்
நடிகை வரலஷ்மி சரத்குமார் சிம்புவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். வரூ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடிகர் சரத்குமாரின் மகளாவார்.

போல்டான கேரக்டர்கள்
தேர்ந்தெடுத்த படங்களில் நடித்துவரும் வரலஷ்மி, போல்டான கேரக்டர்களுக்கு சிறப்பாக பொருந்துகிறார். நடிகர் விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் வில்லியாக இவர் நடித்த கேரக்டர்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

பரபரப்பான செயல்பாடு
இந்நிலையில் தற்போது லாக்டவுன் காலத்தில் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தான் செய்யும் வொர்க்அவுட் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார். மேலும் சமூக நிகழ்வுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

ரசிகர்களுக்கு அறிமுகம்
இந்நிலையில் தற்போது தன்னுடைய செல்ல நாய்க்குட்டியான குஸ்ஸியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அழகான பின்புலத்தில் தன்னுடைய நாய்க்குட்டியின் வீடியோவை அவர் எடுத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











