twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமந்தாவா, எமியா.. தெலுங்கு தெறி ரீமேக்கில் ’வரு’வுக்கு என்ன ரோல்?

    |

    ஐதராபாத்: அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடிக்கிறார்.

    பி. மது தயாரிப்பில், கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாகவுள்ள தெலுங்கு தெறி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களின் பெயர்களை மிகவும் ஹைப்புடன் ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றது படக்குழு.

    ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வந்த நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் இணைந்துள்ளார்.

    தெறி ரீமேக்

    தெறி ரீமேக்

    விஜய்யின் தெறி படத்தை பாலிவுட்டில் ஷாருக்கான் ரீமேக் செய்யவுள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அட்லி இயக்கத்தில் சங்கி எனும் புதுவித கதையில் தான் ஷாருக் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் ரவி தேஜா, தெறி ரீமேக்கில் நடிக்கிறார்.

    சமுத்திரகனி

    விசாரணை படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சமுத்திரகனி, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் த்ரிவிக்ரமின் 'ஆல வைகுந்தபுரமுலோ' உள்ளிட்ட படங்களின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில், ரவிதேஜாவின் 66வது படமான தெறி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ளார். மகேந்திரன் நடித்த கதாபாத்திரமா அல்லது, பிரபு நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரமா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

    இசை

    டோலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தமன் தான் ரவிதேஜாவின் 66வது படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வரும் தமன் கடைசியாக தமிழில் ஆர்யாவின் மகாமுனிக்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    என்ன ரோல்?

    ரவி தேஜாவின் 66வது படத்தில் இணைந்துள்ளதாக சற்றுமுன் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் என்ன ரோலில் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அநேகமாக சமந்தா ரோலில் ஷ்ருதி ஹாசனும், எமி ஜாக்சன் ரோலில் வரலக்‌ஷ்மி சரத்குமாரும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    RT 66 is a romantic action entertainer film written and directed By Gopichand Malineni and produced by Madhu B. The movie cast includes Ravi Teja and Shruti Haasan are playing the main lead roles.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X