ரஜினிகாந்த் முதல் சித்தார்த் வரை.. வரலட்சுமி சரத்குமார் திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!
சென்னை: வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் இன்று நடைபெற்றது. ஆனால், இதுவரை திருமண புகைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. திருமண வரவேற்பு விழா ஜூலை 3ம் தேதி சென்னையில் மாலை நேரத்தில் நடைபெற உள்ளதாகவும் அதன் பின்னர் ஜூலை 4ம் தேதி அதன் புகைப்படங்கள் வெளியாகும் என சரத்குமார் அறிவித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்தை இந்தியாவில் நடத்தாமல் வெளிநாட்டில் தனித்தீவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் இருவருமே தற்போது கணவன் மனைவியாக மாறிவிட்டனர். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் மெஹந்தி ஃபங்க்ஷனை தொடர்ந்து நடைபெற்ற சங்கீத் விழாவில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியே திருமண வரவேற்பு நிகழ்ச்சி போலவே நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
வரலட்சுமி சரத்குமார் திருமணம்: ஜூலை 2ம் தேதி நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது காதலர் நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்துக் கொண்டார். நிக்கோலாய் சச்தேவுக்கு இது 2வது திருமணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 39 வயதாகும் வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில், ஒரு வழியாக திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து நடத்தி முடித்து விட்டார்.

ரஜினிகாந்த் பங்கேற்பு: சங்கீத் நிகழ்ச்சியில் திரிஷா, அர்ச்சனா கல்பாத்தி, மீனா, பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்ற புகைப்படங்களும் முதல் ஆளாக அவர் நிகழ்ச்சிக்கு வந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.
சித்தார்த் முதல் விஷ்ணு விஷால் வரை: ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் சித்தார்த் வரலட்சுமி சரத்குமார் திருமணத்துக்கு முந்தைய விழாவில் கலந்து கொண்டார். மேலும், நடிகர் விஷ்ணு விஷால் தனது 2வது மனைவி ஜுவாலா கட்டாவுடன் திருமண விழாவில் பங்கேற்ற புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் பிரபுதேவா, நடிகை வித்யூலேகா ராமன் என பல சினிமா பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











