கணவரை காணோம்.. வரலட்சுமி படுக்கையறையில் யாரை கொஞ்சுறாரு பாருங்க.. செம க்யூட் வீடியோ!
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஜூலை 3ம் தேதி சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி லீலா பேலஸில் நடைபெற்றது.
வரலட்சுமி சரத்குமாருக்கு நிக்கோலாய் தாலி கட்டிய புகைப்படங்கள் இன்னமும் வெளியாகவில்லை. தனது திருமண புகைப்படங்களை ரகசியமாகவே பேணிக் காத்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளிநாட்டுக்கு கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள வரலட்சுமி சரத்குமார் படுக்கை அறையில் எடுத்த வீடியோ காட்சியை தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

பல கோடி செலவு: வரலட்சுமி சரத்குமார் திருமணத்திற்கு பல கோடிகளை நடிகர் சரத்குமார் செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள. மேலும், வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணமே தாய்லாந்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் திருமண புகைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், எந்த இடத்தில் எப்படி திருமணமானது என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
தென்னிந்திய திரையுலகமே: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், பிரபுதேவா, திரிஷா, சித்தார்த், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் என ஏகப்பட்ட நடிகர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தென்னிந்திய திரை உலகத்தை சார்ந்த பாலகிருஷ்ணா, கிச்சா சுதீப், சுரேஷ் கோபி, சோபனா உள்ளிட்ட பலர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஹனிமூன் புகைப்படம்: புயலுக்குப் பின் அமைதி என ஹனிமூன் சென்ற நிலையில், அங்கே கணவரை கட்டிப்பிடித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் தற்போது, தனது படுக்கை அறையில் எடுத்துக்கொண்டு இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

படுக்கையறை வீடியோ: திருமணத்திற்காக கையில் மெஹந்தி போடப்பட்ட நிலையில், அந்த கைகளை கொண்டு தனது செல்ல நாய்க்குட்டியை படுக்கையறையில் போட்டு மசாஜ் செய்வது போன்று செம க்யூட்டான வீடியோ ஒன்றை வரலட்சுமி சரத்குமார் தற்போது தளபதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். புதுமண தம்பதிகளான வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் திருமணம்: சாயா தேவியை சரத்குமார் பிரிந்து ராதிகா சரத்குமாரை திருமணம் செய்த நிலையில், நிக்கோலாய் சச்தேவும் ஏற்கனவே திருமணமானவர் என்றும் வரலட்சுமியை இரண்டாவதாக அவர் திருமணம் செய்துக் கொள்ள காரணமே இருவரும் காதலித்தது எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











