ராதிகாவை பாராட்டிய சரத்குமாரின் முதல் மனைவி.. வரலட்சுமி சரத்குமாருக்கு தூண் போல நிக்கிறாங்களாம்!

ஹைதராபாத்: வரலட்சுமி சரத்குமார் நடிகையாக பலருக்கும் தெரிந்தாலும், அவரது மனதில் ஆரம்பத்தில் இருந்து இருந்த எண்ணம் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான். இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அதில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அதை தனது சரஸ்வதி படத்தின் மூலம் நிறைவேற்ற உள்ளார். படத்தை இயக்கி, நடித்து, தயாரித்தும் உள்ளார் வரலட்சுமி சரத்குமார். படம் வரும் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால், அதற்கான புரோமோஷன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலட்சுமியின் தயார், அதாவது சரத்குமாரின் முதல் மனைவி சாயா, சரத்குமாரின் இரண்டாவது மனைவியான ராதிகாவை பாராட்டி உள்ளார்.

சாயா பேசுகையில், " வரலட்சுமி ஒரு இயகுநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துகள். நீ ஒரு நல்ல நடிகை என்று எனக்கு நன்றாகவே தெரியும். உன் அளவுக்கு நான் வேகமாக பேச மாட்டேன், ஆனால் கூடிய சீக்கிரமே உன் அளவுக்கு பேசுவேன் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான பூஜாவுக்கும் வாழ்த்துகள்.

Varalaxmi Sarathkumar s mom Chaya Praises Step Mother Radhika at Saraswathi Event Emotional Moment Goes Viral

வரலட்சுமிக்கு எப்போதும் ஒரு தூண் போல இருக்கும் நிக்கோலய் சச்சுதேவிற்கு நன்றி. ராதிகா மற்றும் சரத்குமார் நீங்கள் இருவருமே வரலட்சுமிக்கு மிகவும் சப்போர்ட்டாக துணையாக இருக்குறீர்கள். சரஸ்வதி படத்தின் மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சாயா இவ்வாறு பேச பேச, ராதிகாவும் சரத்குமாரும் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டனர். குறிப்பாக ராதிகா சாயா சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் மகிழ்ச்சியுடன் ஆழ்மனதில் இருந்து நன்றி சொல்வது போல தலை அசைத்துக் கொண்டே இருந்தார்.

Varalaxmi Sarathkumar s mom Chaya Praises Step Mother Radhika at Saraswathi Event Emotional Moment Goes Viral

சரஸ்வதி படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரியா மணி, ராதிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராதிகா சரத்குமார் நடிப்பில் ஏற்கனவே கடந்த வாரத்தில் வெளியான படமான தாய் கிழவி படம் தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X