புயலுக்கு பின் அமைதி.. ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்.. கணவருடன் செம ரொமான்ஸ்!

சென்னை: வரலட்சுமி சரத்குமார் தனது காதலர் நிக்கோலாய் சச்தேவை கடந்த ஜூலை 2ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், இதுவரை திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடவே இல்லை. தனது திருமணத்தை அவ்வளவு ரகசியமாக பார்த்துக் கொள்ளவே வெளிநாட்டில் நடத்தினாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

திருமணத்தை தொடர்ந்து ஜூலை மூன்றாம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னமும் திருமண புகைப்படங்களை அவர் வெளியிடவில்லை.

varalaxmi sarathkumar honeymoon nicholai sachdev

இந்நிலையில், சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும், அந்த புகைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சயா தேவியின் மூத்த மகளான வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை ரகசியமாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 2-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு முன்பே ஹனிமூன்: பல வருடங்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில், நிச்சயமான பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சென்ற புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று வந்த இந்த ஜோடி தங்களின் திருமணத்தையும் தாய்லாந்தில் நடத்தினர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை திருமணம் பற்றிய எந்தவொரு அறிவிப்பும் வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய புகைப்படங்களும் வெளியாகவில்லை.

ஹனிமூன் புகைப்படம்: திருமணத்துக்கு பிறகு தற்போது வெளிநாட்டில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் இருவரும் கட்டிப்பிடித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். இருவரும் எந்த நாட்டில் ஹனிமூன் சென்றுள்ளனர் என்பது குறித்த தகவலையும் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புயலுக்குப் பின் அமைதி: கணவர் நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் கட்டிப்பிடித்தபடி இருக்கும் அந்த புகைப்படத்தில், "Calm after Storm" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் நல்லா ஜாலி பண்றீங்க என சோஷியல் மீடியாவில் அந்த போட்டோவை ஷேர் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X