அடுத்தக் கட்டத்துக்கு வர வேண்டாமா? இயக்குனர் ஆகிறார் பிரபல நடிகை.. அறிவிக்கும் முன்பே அவசரம்!
சென்னை: பிரபல நடிகை இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார். அவசரப்பட்டு அறிவித்ததால் ட்விட்டை அழித்துவிட்டார்.
பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. 'போடா போடி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.

தாரை தப்பட்டை
விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை, புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி 2, விஜய்யின் சர்கார் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

நட்பில் விரிசல்
தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவரும் நடிகர் விஷாலும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இருவரும் நாங்கள் நண்பர்கள்தான் என்று கூறிவந்தனர். இருவரும் நட்பிலும் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பிரிந்தனர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி, இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.

இணையத்தில் போஸ்டர்
அவர் கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இதை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் போஸ்டரை நடிகை லட்சுமி மஞ்சு ட்விட்டரில் வெளியிட்டார்.

மனப்பூர்வ வாழ்த்து
பின்னர் திடீரென்று அதை நீக்கிவிட்டார். அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே அந்த ட்வீட்டை அவர் வெளியிட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதை நீக்கினாராம். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், இயக்குநராக அறிமுகமாவதை அடுத்து, அவருக்கு பலர் மனப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











