Varalaxmi Sarathkumar Marriage: வரலட்சுமிக்கு நச்சென முத்தம் கொடுத்த திரிஷா.. களைகட்டிய திருமண விழா!
சென்னை: வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவுக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
சமூக வலைதளங்களில் விஜய் பிறந்தநாளுக்குப் பிறகு நடிகை திரிஷா தான் திடீரென பேசுபொருளாக மாறிவிட்டார். லிப்டில் விஜய்யுடன் திரிஷா வெளியிட்ட அந்த செல்ஃபி புகைப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பியது. சுசித்ரா உள்ளிட்ட பலர் விஜய் மற்றும் திரிஷாவை இணைத்து வைத்து வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

ஆனால், அது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை எக்ஸ் தளத்தில் நடிகை திரிஷா வெளியிடவில்லை. இந்நிலையில், செம ஜாலியாக வரலட்சுமி சரத்குமார் திருமண விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
வரலட்சுமி சரத்குமார் திருமணம்: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. மாலத்தீவில் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், திருமணத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிம்பு, நயன்தாரா, சித்தார்த் என ஏகப்பட்ட கோலிவுட் பிரபலங்களுக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களான பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலருக்கும் அவர் திருமண அழைப்பிதழை நேரில் குடும்பத்துடன் சென்று வழங்கியுள்ளார்.

மெஹந்தி மற்றும் சங்கீத்: திருமணத்தை முன்னிட்டு மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக களைகட்டி வருகின்றன. ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் என ஒட்டுமொத்த குடும்பம் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வரலட்சுமி சரத்குமாரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
திரிஷா பங்கேற்பு: நடிகை திரிஷா நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரலட்சுமிக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகை ராதிகாவுடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு பொன்னியின் செல்வன் 2, லியோ படங்களில் நடித்த திரிஷா அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி, கோட் படத்தில் கேமியோ, மலையாளத்தில் டொவினோ தாமஸின் ஐடென்டிடி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட நட்சத்திரங்கள்: நடிகர் பிரபு, மீனா, அனிதா விஜயகுமார் என ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வரலட்சுமியின் திருமணம் விரைவில் நிக்கோலாய் சச்தேவுடன் நடைபெற்று அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத்குமார் செம ஹேப்பி: தனது முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்த மூத்த மகள் வரலட்சுமிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே செம ஹேப்பியாக உள்ளனர். சங்கீத் நிகழ்ச்சியில் சரத்குமார் மற்றும் ராதிகா போட்ட செம டான்ஸ் வீடியோவில் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோலிவுட்டின் மிக பிரம்மாண்டமான திருமணமாக வரலட்சுமி சரத்குமார் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சரத்குமார் மகள் திருமணம் நடைபெறுகிறது.



Click it and Unblock the Notifications











