நட்சத்திரங்களால் ஜொலிக்குது வரலட்சுமி ரிசப்ஷன்.. திரையுலகினர் வருகை.. வரவேற்பு கோலாகலம்

சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் இன்று திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அரசியல் வாசம் முதல் திரையுலக வாசம்வரை அடித்தது. அந்தப் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

கோலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான சரத்குமாருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்த அவர் அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களில் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த வரலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தாலும்; சரத்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களை வரலட்சுமி தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalaxmi Sarathkumar MK Stalin

போடா போடி: ஒருவழியாக சரத்குமாரின் மனம் மாறியதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரு. அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் வரலட்சுமியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. நடிப்பு, நடனம் என அனைத்திலும் அந்தப் படத்தில் கலக்கினார். அதன் காரணமாக அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன.

Varalaxmi Sarathkumar MK Stalin

நிச்சயதார்த்தம்: 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அது வெறும் கிசுகிசு என்பது பின்னர் உறுதியானது. சூழல் இப்படி இருக்க அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். அந்தக் காதலுக்கு வரலட்சுமியின் வீட்டில் க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. எனவே அவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார். நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதும்; மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Varalaxmi Sarathkumar MK Stalin

திருமணம் கோலாகலம்: இந்நிலையில் இருவரது திருமணமும் நேற்று தாய்லாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள். அதனைத் தொடர்ந்து சென்னையில் திருமண ரிசப்ஷன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு; அதன்படி இன்று கொண்டாடப்பட்டது. வரலட்சுமி மைல்டு சிவப்பு நிறத்தில் கவுன் அணிந்திருந்தார். நிக்கோலாய் ஒரு கோட் அணிந்திருந்தார்.

Varalaxmi Sarathkumar MK Stalin

பிரபலங்கள் பங்கேற்பு: இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள்.

Varalaxmi Sarathkumar MK Stalin

அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி திரையுலகிலிருந்து நடிகரும், சத்யராஜின் மகனுமான சிபி ராஜ் கலந்துகொண்டார். மேலும் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X