என்னுடைய கடவுளுக்கு பிறந்தநாள்.. இயக்குநர் பாலாவுக்கு சூறாவளியாய் வாழ்த்து சொன்ன வரு!

சென்னை: இயக்குநர் பாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவருக்கு சூறாவளியாய் வாழ்த்து கூறியிருக்கிறார்.

Recommended Video

DIRECTOR BHARAT BALA EXCLUSIVE TALK | மீண்டும் எழுவோம் | V-CONNECT | Filmibeat Tamil

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவர் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்.

1999ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே, தேசிய விருது, தமிழக அரசின் விருது என ஒட்டு மொத்த விருதுகளையும் அள்ளினார்.

 அள்ளிய விருதுகள்

அள்ளிய விருதுகள்

இயக்குநர் பாலா இதுவரை சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை மற்றும் நாச்சியார் ஆகிய எட்டுப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களை தயாரித்துள்ளார். இவரது படங்கள் இதுவரை 6 தேசிய விருதுகள், 13 மாநில அரசின் விருதுகள், 15 பிலிம் ஃபேர் விருதுகள், 14 இன்டர்நேஷனல் விருதுகள் என அள்ளி குவித்துள்ளன.

 இன்று பிறந்தநாள்

இன்று பிறந்தநாள்

நடிகர்கள் விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்டோர் தமிழ் சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள காரணமாய் இருந்தது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான பாலாவின் படங்கள்தான். இந்நிலையில் இயக்குநர் பாலா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

 ஹேஷ்டேக் ட்ரென்டிங்

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களும் இயக்குநர் பாலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayBala என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது.

 நடிகை வரு

நடிகை வரு

சினிமா பிரபலங்களும் இயக்குநர் பாலாவுக்கு தங்களின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இயக்குநர் பாலாவுக்கு டிவிட்டர் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

 உங்களின் சூறாவளி

உங்களின் சூறாவளி

அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்னுடைய கடவுளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. இன்று என்னை இப்படி ஒரு நடிகையாக உருவாக்கியவர் அவர்தான். பிறந்த நாள் வாழ்த்துகள் பாலா சார், கடவுளின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு.. உங்களின் சூறாவளி என பதிவிட்டுள்ளார்.

 சூறாவளியாய் வாழ்த்து

சூறாவளியாய் வாழ்த்து

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடிகர் சசிக்குமாருடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் சூறாவளி கதாப்பாத்திரத்தில் அவர் ஆடிய ஆட்டமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் அறிமுகப்படுத்திய சூறாவளியாய் வாழ்த்து கூறியிருக்கிறார் வரலக்ஷ்மி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X