வானம் அளவுக்கு உங்களை விரும்புறேன்... சரத்குமாரின் பிறந்தநாளில் வரலஷ்மி வாழ்த்து
சென்னை : நடிகர் சரத்குமார் இன்றைய தினம் தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இதனிடையே அவரது மகளும் நடிகையுமான வரலஷ்மியும் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிறப்பான நடிகர்
நடிகர் சரத்குமார் சிறப்பான நடிகராகவும், டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை கொண்டவராகவும் உள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

உறுப்புதானம் செய்ய கோரிக்கை
அரசியலிலும் ஈடுபட்டுவரும் சரத்குமார், இன்றைய தினம் தனது 67வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். அவரும் உறுப்பு தானத்திற்கான முன்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
Recommended Video

வீடியோ பதிவு
இந்நிலையில் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அவரது மனைவியும் நடிகையுமான ராதிகாவும் இரும்பு மனிதர் என்று குறிப்பிட்டு சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

வானம் அளவிற்கு நேசம்
இதனிடையே அவரது மகள் வரலஷ்மி சரத்குமாரும் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தற்போது இருப்பது போலவே எப்போதும் இருக்க வேண்டும் என்றும் அவரை தான் வானம் அளவிற்கு நேசிப்பதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











