நானும், முருகதாஸ் சாரும் சேர்ந்து விஜய் சாரை செமயா கலாய்ப்போம்: வரலட்சுமி
Recommended Video

சென்னை: சர்கார் ஷூட்டிங்கின்போது முருகதாஸுடன் சேர்ந்து விஜய்யை கலாய்த்ததாக தெரிவித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அந்த கதாபாத்திரத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

விஜய்
படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரொம்ப அமைதியாக இருப்பார். நானோ விடாமல் பேசிக் கொண்டே இருப்பேன். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தான் நான் அமைதியாக இருந்தேன். அங்கு வந்தவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நிறுத்தி நிதானமாக பேசினேன் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி
இந்த கதாபாத்திரத்தில் வரலட்சுமியை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று விஜய் சார் பாராட்டியதை மறக்கவே முடியாது. லாஸ் வேகாஸில் சர்கார் ஷூட்டிங் நடந்தபோது நான் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாக பயணம் செய்தேன். அதை பார்த்த முருகதாஸ் சாருக்கு ஒரே ஆச்சரியம் என்கிறார் வரு.

விமானம்
விடாமல் பேசிக் கொண்டே இருப்பீர்களே. நீங்கள் எப்படி விமானத்தில் தனியாக வந்தீர்கள் என்று முருகதாஸ் சார் என்னிடம் கேட்டார். விமானத்தில் என் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிக் கொண்டு தான் வந்தேன் என்றேன். சர்கார் படப்பிடிப்பு தளத்தில் நானும், முருகதாஸ் சாரும் சேர்ந்து விஜய் சாரை கலாய்த்துக் கொண்டே இருந்தோம் என்று வரலட்சுமி கூறியுள்ளார்.
நடிப்பு
வரலட்சுமியால் பேச்சி போன்ற கதாபாத்திரத்தில் மிரட்டவும் தெரியும், சர்கார் படம் போன்று அமைதியாக இருந்து மாஸ் பண்ணவும் தெரியும் என்கிறார்கள் ரசிகர்கள். சண்டக்கோழி 2 படத்தில் கீர்த்தியை ஓரங்கட்டி பெயர் வாங்கிய வரலட்சுமி சர்காரிலும் தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











