மிகப்பெரிய வசூல் சாதனை செய்த ‘வரனே அவஷ்யமுன்ட்‘.. 25 கோடி கலெக்ஷன்!

சென்னை : மலையாள சினிமாவில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்துள்ளது 'வரனே அவஷ்யமுன்ட்' திரைப்படம்.

அனுப் சத்யன் இயக்கி இருக்கும் படம் 'வாரனே அவஷ்யமுன்ட்' இது இவருக்கு முதல் திரைப்படம். அதில் தனி முத்திரையும் பதித்துள்ளார் இயக்குனர். இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்துள்ளார். அவருடன் சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஊர்வசி போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளனர்.

 Varane Avashyamund crosses Rs 25 crore

இப்படத்திற்கு அல்போன்ஸ் ஜோசப் இசையமைத்துள்ளார். முகேஷ் முரளிதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இப்படத்தின் டீசர் தான் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியதாக படத்தை பார்த்த பலரும் கூறினர்.

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருக்கும் கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா தான் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. சில பல காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷோபனா நடித்துள்ளார். பல வருடங்களாக வெள்ளித்திரையை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தற்போது இதில் நடித்துள்ளார்.

 Varane Avashyamund crosses Rs 25 crore

படம் கடந்த 7 ஆம் தேதி வெளியாகி மலையாள திரை ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பின் ஷோபனா இதில் நடித்துள்ளார், இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது. இந்த படம் மலையாள திரைப்பட உலகில் பிரம்மாண்ட வெற்றியும் பெற்றுள்ளது.

தற்போது துல்கரின் அடுத்த படமான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படம் வரும் வாரம் வெளியாக உள்ளது. மலையாளத்தில் துல்கர் தயாரித்த திரைப்படம் படம் வெற்றி பெற்றதை போல தமிழில் அவர் நடித்துள்ள திரைப்படம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X