Varisu: சரத்குமார் ராதிகா மகனா இது? தேடிவந்த வாரிசு... வாரி அணைத்துக்கொண்ட சூர்யவம்சம் ஃபேமிலி!
சென்னை: தமிழ்த் திரையுலகின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார்.
பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
இந்த வாரம் ரிலீஸான ருத்ரன் படத்திலும் சரத்குமார் நடித்துள்ள நிலையில், அவரது ஃபேமிலி போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சரத்குமார் - ராதிகா இருவரும் அவர்களது மகன் ராகுலுடன் எடுத்துக்கொண்ட போட்டோ தான் அது.

சரத்குமார், ராதிகா ஃபேமிலி போட்டோ: 1980களின் இறுதியில் சினிமாவில் அறிமுகமான சரத்குமார், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர், வாரிசு படத்தில் ராஜேந்திரன் பழனிசாமி கேரக்டர்களில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார்.
சரத்குமார் தனது முதல் மனைவியை பிரிந்த பின்னர் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ராதிகாவும் நடிகர் பிரதாப் போத்தன், ரிச்சர்ட் ஹார்டி ஆகியோரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாருக்கு முதல் மனைவி மூலம் வரலட்சுமி, பூஜா என இரு மகள்கள் உள்ளனர். அதேநேரம் ராதிகாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சரத்குமார் - ராதிகா ஜோடிக்கு, 2004ல் மகன் பிறந்த நிலையில், அவருக்கு ராகுல் என பெயர் வைத்தனர். அதன்பிறகு ராகுல் எங்கே இருக்கிறார் என்பது பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரியாது. அதேநேரம் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிகையாக கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வில்லி கேரக்டர் என்றால், வரலட்சுமி தான் முதல் சாய்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சரத்குமார் - ராதிகா தம்பதியினரின் மகன் ராகுல் தற்போது சென்னை வந்துள்ளாரா அல்லது, வெளியூர் கிளம்பிவிட்டாரா என தெரியவில்லை. டூர் பேக், லக்கேஜ் என வாரிசு பட விஜய் போல வந்து நிற்கும் ராகுலை, ராதிகாவும் சரத்குமாரும் வாரி அரவணைக்கின்றனர். 19 வயதான ராகுல் இந்த போட்டோவில் ஆள் பார்க்க ஸ்டைலிஷாக தெரிகிறார்.
ராப் பாடகரான ராகுல், சன் டேக் ஆஃப் மூலம் இசையுலகில் அறிமுகமாகினார். இந்த ஆல்பத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் வெளியான புதிதில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ராகுலின் இசைப் பயணம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











